குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் தரமான நெல் விதை விற்பனை

0 16
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 9 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள வேளாண்மை கல்வி நிறுவனத்தில் குறுவை மற்றும் சம்பா பருவத்திற்கு ஏற்ற விதைநெல் விற்பனை தொடங்கியது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவனம் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தரமான நெல் விதை இரகங்கள் உற்பத்தி செய்து திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கும் மற்றும் நெற் பயிரிடும் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் விற்பனை செய்துவருகிறது. தற்போது, குறுவை மற்றும் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெற்பயிர் இரகமான ஏஎஸ்டி 16 (ASD 16) உண்மைநிலை விதை (TFL) 2000 கிலோ, (விலை ரூ. 35/கி 30 கி பை), திருச்சி 3 (TRY 3) ஆதார விதை (FS1) 5700 கிலோ (விலை ரூ. 41 /கி / 30 கி பை) மற்றும் பசுந்தாள் உரப்பயிர் தக்கைப்பூண்டு உண்மைநிலை விதை (TFL) 200 கிலோ, (விலை ரூ. 100 (கி) ஆகிய விதைகள் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் இருப்பு உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல் விதையினை நேரில் சென்றோ அல்லது பார்சல் சர்விஸ் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு முதல்வர், வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளூர் 621712, திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொலைபேசி எண் 9842652934 (முனைவர் ஜெ. கோகுலகிருஷ்ணன்) 7010439150 (முனைவர் இரா. வினோத்)

Leave A Reply

Your email address will not be published.