திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

0 131
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 19 ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் – ஏராளமான காங்கிரஸ் மற்றும்  த.வெ.க.வினர்  பங்கேற்பு

அகில இந்திய காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியின் 56வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைமை அலுவலகம் அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் கேக் வெட்டி விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர்திலக் , காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபிப்ரகுமான் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் திலீப், உட்பட பலர் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மருத்துவம் முகாம் மற்றும் ரத்ததான முகாமில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.