இந்து சமய அறநிலைத்துறை சார்பாக, கலைக்கல்லூரி தற்காலிகமாக செயல்படும் வகுப்பறையில் அமைச்சர் ஆய்வு

0 319
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக கள்ளகுடி டால்மியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடத்தப்படுவது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு இப்பள்ளி வளாகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராஜ் லால்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சௌந்தரபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

 

Leave A Reply

Your email address will not be published.