அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் கைது!

0 1,088
Stalin trichy visit

திருச்சியில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக மாஜி ஒன்றியச் செயலாளர் நவல்பட்டு விஜியைப் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி திமுக., தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றுபவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இவரைக் கடந்த 2021 ஜனவரி 29 ந் தேதி பூலாங்குடி காலனி பாரத் நகரைச் சேர்ந்த திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளரான நவல்பட்டு விஜி (50) அவதூறாகவும், தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், வாய்ஸ் மெசேஜிலும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவெறும்பூர் அருகே குண்டூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் மாரியப்பன் (42) நவல்பட்டு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து எஸ்ஐ., சாண்ட்ரோ வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று நவல்பட்டு விஜி (50) யைப் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.