மணப்பாறையில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜூன் 29 மணப்பாறையில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி. போலீசார் – தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் மற்றும் மணவை கிங்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
மணப்பாறை காமராஜர் சிலை அருகில் இருந்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
அனைவரும் தலைக்கவசம் அணிந்து கொண்டு கோவில்பட்டி சாலை, திருச்சி சாலை, புதுத்தெரு, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தலைக்கவசம் அணிவதால் உயிரிப்பை தடுக்க முடியும், சீட்பெலட் அணிய வேண்டும், வாகன விபத்துகளை தவிர்க்க மோட்டார் வாகன சட்டங்களையும், சாலை விதிகளையும் பின்பற்றி செயல்பட வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த பேரணியில் போலீசார், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் முல்லை சந்திரசேகர், சௌமா பள்ளி முதல்வர் மனோஜ்குமார், கனேஷ்ராஜா, ராஜசேகர், பெரியசாமி, சிவக்குமார்,ஜெயம்சக்திவேல், குணசேகரன், கண்ணன், ராஜேஷ், பழபெரியசாமி, ஜிவி, பில்லாசுப்ரமணி, ஜெய்சங்கர், ரஞ்சித், நவீன், வெங்கடாசலம், ராகுல், வேல்முருகன், மணவை ஸ்ரீ முனியப்பன் இருசக்கர நல சங்கத்தினர்கள் பன்னீர்செல்வம், தேவசகாயம், முருகேசன், ஸ்ரீ நல்லாண்டவர் இருசக்கர நல சங்கத்தினர்கள் ராஜகோபால், வின்மணிராஜ், தீபன்குமார் மேலும் JCI மணவை கிங்ஸ் அங்கத்தினர்கள், மணப்பாறை காவல்துறையினர்கள், மற்றும் இருசக்கர வண்டி பழுதுபார்போர் சங்கத்தினர்கள் கலந்து கொண்டர்கள்