ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (28.06.2026) காலை, வட காவிரியில் (கொள்ளிடம் ஆறு) இருந்து தங்க குடம் மற்றும் வெள்ளி குடங்களில் புனித நீர் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முழுவதும் பெருமாள் சேவை நிறுத்தப்பட்டது.