மர்ம பொருள் வெடித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் படுகாயம்

0 11
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 29 திருச்சி மாவட்டம், துறையூர்  உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45). இவர் உப்பிலியபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒட்டம்பட்டி கரடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த மர்ம பொருளை எடுத்து கையால் தட்டியுள்ளார். அப்போது அந்த பொருள் திடீரென வெடித்து சிதறியது. இதில் செந்தில்குமாரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு வந்த அக் கம்பக்கத்தினர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.