கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூன் 29 முசிறியை அடுத்த வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லாயி கோவில்மேடுபகுதியில் அமைக்கப்பட்டு வரும் கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த ஊரை சேர்ந்த மக்கள் கோழிப்பண்ணை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க வேண்டாம் என்று கோஷமிட்டனர். மேலும் இந்த பிரச்சினையை அரசு கவனத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே,பொதுமக்கள் வசிக்கும் பகுதி அருகே கோழிப்பண்ணை வருவதால்,துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படும் என்று கூறி, கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.