அ.தி.மு.க. “பொன்விழா” ஆண்டை கொண்டாடும் விதமாக இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பிள்ளையார் கோவில் அருகில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி வைத்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் S.S.ராவணன், கும்பகுடி கோவிந்தராஜன், பகுதி செயலாளர்கள் S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், A.தண்டபாணி, நகர செயலாளர் S.P.பாண்டியன், அணி செயலாளர்கள் K.S.பாஸ்கர், ATP.N.கார்த்திக், சூரியூர் S.ராஜமணிகண்டன், M.சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் R.P.கணேசன், K.P.சங்கர், விஸ்வநாதன், மாரிமுத்து, வேல்முருகன், முருகானந்தம், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் S.சகாதேவ் பாண்டியன் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக பங்கேற்றனர்.