ஏமன் நாட்டில் இருந்து வந்தவர் திருச்சி விமான நிலையத்தில் கைது

0 352
Stalin trichy visit

இந்திய அரசின் சார்பில் ஏமன் நாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி(வயது 61). இவர் ஏமன் நாட்டிற்குச் சென்று அங்கு எலட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் ஏமன் நாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது குடியுரிமை பிரிவு அதிகாரிகள் தடை செய்யப்பட்டிருந்த நாட்டிற்கு சென்று வந்ததால் அவரை ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். சூரிய மூர்த்தியை கைது செய்த ஏர்போர்ட் போலீசார் அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.