காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

0 364
Stalin trichy visit

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிந்து நிலுவையில் உள்ள வழக்குகளை பார்வையிட்டு அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டியும், போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அன்புடன் புகாரினை பெற்று அவர்களுக்கு தேவையான உதவியினை மேற்கொண்டு அளிக்கும் புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சகா காவலர்களிடம் எடுத்துரைத்தார்.

அப்போது முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி, தொட்டியம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், காட்டுப்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சசிகலா மற்றும் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சக காவலர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.