கர்மவீரர் காமராஜ் பிறந்தநாள் : தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 48
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (15.07.2026) காலை சுமார் 8 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் மு. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், மாநில அணி நிர்வாகி செந்தில், பகுதி கழகச் செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மேலும், மாவட்ட மற்றும் மாநகர கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், வட்டம், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.