ஸ்ரீரங்கம் – திருவெறும்பூர் புதிய அரசு பேருந்து சேவை : துரை வைகோ எம்பி துவக்கி வைத்தார்

0 12
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் – திருவெறும்பூர் புதிய அரசு பேருந்து சேவை தொடக்கம்; எம்பி துரை வைகோ கொடி அசைத்து துவக்கி வைத்தார்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இருந்து  பால்பண்ணை வழியாக திருவெறும்பூருக்கு நேரடி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் – திருவெறும்பூர் இடையே நேரடி பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில்  எம்பி துரை வைகோ கலந்து கொண்டு, புதிய பேருந்து சேவையை கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். புதிய பேருந்து சேவையைத் தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுடன் இணைந்து அதே பேருந்தில் பயணம் மேற்கொண்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்த நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால், தினசரி அலுவலகம் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள் என்பதால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.