மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி பிரச்சாரப் பயணம் -திருச்சி வருகை

0 43
Stalin trichy visit

திருச்சி, செப்.21 மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் பிரச்சாரப் பயணம் இன்று திருச்சி வந்தடைந்தது

மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்திடவும், ராசி மணலில் அணைக்கட்ட திட்டமிடவும், தமிழகத்தை வறட்சியிலிருந்து மீட்டெடுக்கவும் வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளரும், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் தொடங்கி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் 5 நாள் பிரச்சார பயணம் நடைபெறுகிறது.

நேற்று பிரச்சார பயணத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமா ராஜா தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

இன்று பிரச்சார பயணம் திருச்சி அண்ணா சிலை வந்தடைந்தது அவர்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வரவேற்பளித்தனர்

அவர்கள் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக சென்றனர்

தொடர்ந்து மேகதாதுவில் அணையை கட்டக்கூடாது, ராசிமணலில் அணை கட்ட திட்டம் வேண்டும் மேலும் தமிழகத்தை கடும் வறட்சியிலிருந்து மீட்டெடுப்பது குறித்து விளக்கவுரை ஆற்றினர் அதனை தொடர்ந்து தங்களது பிரச்சாரப் பயணத்தை துவங்கினர்

இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
இந்த பிரச்சார பயணமானது 24 ஆம் தேதி திருவாரூரில் நிறைவடைகிறது

Leave A Reply

Your email address will not be published.