திருவானைக்காவல் – ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

0 62
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் திருவானைக்காவல் பகுதியில்  உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு கொறடா மனோகரன் கலந்து கொண்டு பேசும் பொழுது இன்றைக்கு இளைஞர்களை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வில்லை. ஜென்சி கூட்டம் என்று அழைக்கப்படும் இளைஞர்களிடம் அதிமுக இயக்கத்தை பற்றியும், நம்முடைய ஆட்சியில் செய்த திட்டங்கள், சாதனைகளை பற்றி எடுத்து கூறவில்லை. 2018- 19 கொரோனா சமயத்தில் வீடு விடாக சென்று பொதுமக்களுக்கு எடப்பாடியார் பொருட்களை கொடுத்தார். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆல் பாஸ் போட்டவர். இவர்கள் எல்லாம்10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்தலில் சினிமா மாயில் மயங்கி வாக்குகளை அவர்களுக்கு அளித்துள்ளனர்.

அதிமுகவில் இளைஞர்களை சேர்க்க வில்லை. வருங்காலத்தில் சேர்க்க வேண்டும். அதிமுக
ஆலமரம் போன்றது விழாது. சில தற்குறி பேசலாம்.வருங்காலத்தில் அவர்களுக்கு
தக்க பாடம் புகட்ட வேண்டும் அதிமுகவை சிண்டநினைத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.இன்றைக்கு ஆட்சி நடக்க வில்லல. சூட்டிங் நடக்கிறது. கரூர் சம்பவத்தில்
விஜயை காப்பற்றியது எடப்பாடியார்.அன்றைக்கு அவர் ஆதரவாக பேசவில்லை யென்றால் நிலைமை மாறி இருக்கும்.

தாய்மாமன் சீர் என்று  இன்றைக்கு பெருமையாக சொல்கிறார்கள்.ஆனால் அன்றைக்கு ஜெயலலிதா தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை என்று பலதொலைநோக்கு திட்டங்களை வழங்கினார். அதேபோல எடப்பாடி  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அவர்கள் டாக்டர்களாக உருவாக காரணமாக இருந்தார். இன்றைக்கு மைனாட்டி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிய பிடிக்க அவர்கள் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார் கள்,திமுக அதிமுகவை பார்த்து களவாணிகள் என்று விஜய் கூறுகிறார் ஆனால் உண்மையான களவாணி யார் என்பது தெரியுமா ?நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளை அமைச்சர் பதவி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அங்கிருந்து களவாணி இவர் கூட்டணியில் சேர்த்துக் கொண்டார் அதுபோல அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்களை ராஜரமா செய்ய வைத்து தனது கட்சியில் சேர்த்துக் கொண்டார் இது களவாளி தனம் இல்லையா? இதிலிருந்து களவாளி யார் என்பது தெரியும்

6 மாதம் 1 வருடத்தில் இந்த ஆட்சி முடிந்து விடும். இனி குதிரை பேரம் இருக்காது கட்சியில் எம் எல்.ஏ சேர மாட்டார்கள். இந்த இயக்க வெற்றி பெறும்.இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் இளைஞர்களை கட்சியில் சேர்த்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.