முத்தரையர் சமுதாய இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

0 164
Stalin trichy visit

திருச்சி செப். 21 திருச்சி லால்குடி கல்லக்குடி முதுவத்தூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் இவரது மனைவி காஞ்சனா(வயது 42) மற்றும் ஊர் பொதுமக்கள் தமிழர் தேசம் கட்சி மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் டி.எம். குமார், வழக்கறிஞர் திவாகர் முன்னிலையில் திருச்சி கலெக்டரிடம் இன்று ஒரு புகார் மனு அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது

நாங்கள் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு நூறு குடும்பங்கள் வசித்து வருகிறோம் எங்கள் பக்கத்து தெருவில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 16ம் தேதி எங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக சென்ற போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தடுத்து நிறுத்தி பிரச்சனை செய்து எங்கள் சமூக இளைஞர்களை அடித்தனர். பின்னர் 200 பேர் எங்கள் தெருவுக்குள் நுழைந்து எங்கள் வீடுகளை சேதப்படுத்தி, பெண்களை மானபங்கப்படுத்தினர் இது தொடர்பாக கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து எங்கள் தெருவை சேர்ந்த 50 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இடம் நேரடியாக சென்று மனுக்கள் கொடுத்தோம்.

இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் தெருவுக்கு வரும் தூய்மை பணியாளர்களையும் தூய்மைப் பணி மேற்கொள்ள விடாமல் தடுத்து விடுகிறார்கள். மேலும் முத்தரையர் சமுதாய மக்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்றும் எங்கள் தெரு பெண்கள் குடிநீர் எடுக்க செல்லும்போதும் பஸ் நிறுத்தம் செல்லும் போதும் அந்த சமுதாய இளைஞர்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆகவே முத்தரைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அடித்து கொலை மிரட்டல் விடுத்து கேலி செய்து வரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.