ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
கடந்த மே மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மணிகண்டம் ஒன்றியக் குழுத்தலைவர் கமலம் கருப்பையா, பகுதிப்பிரமுகர் ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.