நீட் தேர்வு முறைகேடு, மத்திய அரசின் அடக்குமுறைகளை கண்டித்து மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 128
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 21  நீட் தேர்வு முறைகேடு மற்றும் மத்திய அரசின் அடக்குமுறையைக் கண்டித்து AISF மற்றும் AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வில் தொடரும் முறைகேடுகளைக் கண்டித்தும், டெல்லியில் ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளைஞர் பெருமன்ற மாநில துணைத் தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, தொடர் நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.