திருச்சியில், ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்படாத, ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

0 92
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23  திருச்சியில், ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்படாத, ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தர நிர்ணய அமைப்பின் கோயம்புத்துார் கிளை அதிகாரிகள், திருச்சியில் உள்ள நகைக்கடைகளில் சோதனை நடத்தினர். இயக்குநர்கள் வினித் குமார், ரினோ ஜான் எஸ் ஆகியோர் தலைமையில், இரண்டு குழுக்களாக பிரிந்து, திருச்சி, பெரியகடை வீதியில் உள்ள, ‘ஸ்ரீ வாசவி ஜுவல்லர்ஸ், ஸ்ரீ செல்வி தங்க மாளிகை’ ஆகிய கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்திய தர நிர்ணயச் சட்டப்படி நடத்தப்பட்ட சோதனையில், ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் இல்லாத, 7.35 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4.9 கிலோ தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

‘ஹால்மார்க்கிங்’ சட்டப்படி, ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்கப் பொருட்களை விற்கக்கூடாது. அதனால், இரண்டு கடைகளிலும் ஹால்மார்க் முத்திரையிடப்படாத, 4.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.