போதை மாத்திரைகள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, ஆக.24 திருச்சி முதலியார்சத்திரம் ஆலம் தெருவை சேர்ந்தவர் ஆல்பின்(வயது 23). இவர் கடந்த மாதம் 13-ந்தேதி போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் பாலக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரை ஜாமீனில் வெளியே விட்டால் மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவார் என்பதால், ஆல்பினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆல்பினியிடம் நேற்று வழங்கப்பட்டது.