போதை மாத்திரைகள் பறிமுதல்
திருச்சி, ஆக. 24 திருச்சி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற சிவானந்தம்(31), வரகனேரி பகுதியை சேர்ந்த கணேசன், பொன்மலை பகுதியை சேர்ந்த பாலகுமார்(35), உறையூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(33), உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்த நிசாந்தினி(38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 478 கிராம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதே போல் திருச்சி ஓடத்துறை மேல் பாலத்தின் கீழ் போதை மாத்திரைகள் விற்ற ஜெயம்பூரம்பாளையம் பேட்டை பகுதியை சேர்ந்த தனுஷ்(24) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து மொத்தம் 500 போதை மாத்திரைகள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.