சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி காணிக்கை
திருச்சி, ,ஆக.26 திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் இரண்டாவது முறையாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும், இக்கோவிலின் தக்காருமான ஞான சேகரன், இணை ஆணையர் சூரியநாராயணன், மண்ணச்ச நல்லூர்சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.1 கோடியே 39 லட்சத்து 57 ஆயிரத்து 585-ம், ஒரு கிலோ 733 கிராம் தங்கமும், 2கிலோ 384 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு நோட்டுகள் 187 மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் 1,129-ம் இருந்தது. மேலும் உபகோவில்களான இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.7 லட்சத்து 91 ஆயிரத்து 74-ம், உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில் உண் டியல்கள் மூலம் ரூ.15 ஆயிரத்து 686-ம், போஜீஸ்வரர் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 398-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.