லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ. 11.18 லட்சம் பறிமுதல்

0 17
Stalin trichy visit

திருச்சி, ஆக. 28 மின்வாரிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ. 11.18 லட்சம் பறிமுதல்

திருச்சி தென்னூரில் உள்ள திருச்சி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள 9 மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் அலுவகங்களில் நேற்று மதியம் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற் கொண்டனர். இதில் உதவி செயற்பொறியாளர் முதல் போர்மேன் வரை மொத்தம் 12 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1லட்சத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 4 மாதங்களாக சிந் தாமணி பிரிவு உதவி பொறியாளர் கமல் என்பவரின் ஜி-பே கணக் (கில் ரூ.9 லட்சத்து 14 ஆயிரமும், பாலக்கரை பிரிவு உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன் என்பவரின் ஜி-பேகணக்கில் ரூ.4லட்சத்து 44 ஆயிரமும் என்று மொத்தம் ரூ.13 லட்சத்து 58 ஆயிரம் வரவு வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மேலக்கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மதியம் கரூர் லஞ்ச ஒழிப்புதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் தலைமையில் இன்ஸ்பெக்டர் கள் சுவாமிநாதன், தங்கமணி உள்பட 15 அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா அலுவல கத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சார்பதிவாளர் தனி அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப் பட்டது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரொக்கமாக ரூ.34 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப் பட்டது, ஜி-பே மூலம் ரூ.98 ஆயிரத்து 150 பெற்றது குறித்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் தாசில்தார் அலுவலகத் தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.