நகைக்கடையில் வெள்ளிப்பொருட்களை திருடிய 3 பேர் கைது

0 10
Stalin trichy visit

திருச்சி, ஆக. 28 திருச்சிமேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 55). இவர் திருச்சி சின்ன கம்மாளத் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார்.இவர் சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கடைக்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தன . மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயி ருந்தது. இதுகுறித்து ரவி கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அந்த கடையில் திருடியதாக நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 27), பாலக்கரை காஜா பேட் டையைச் சேர்ந்த முகிலன் (19), ஜோதி (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 190 கிராம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.