சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடி விசாரணை
திருச்சி, ஆக. 28 திருச்சி மாவட்டம்துறையூர் தாலுகா உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை த.மங்கப்பட்டி புதூரில் தமிழக அரசு சார்பில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சமத்துவபுரத்தில் 100 ஏழை எளிய மக்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அவற்றுக்கு வீட்டு எண் வழங்கப்பட்ட பின்னர் சிலரது ஒதுக்கீட்டு ஆணை ரத்து செய்யப்பட்டு வேறு நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட சுமார் 40 பேர் புகார் தெரிவித்தனர்.
இதில் சில அதிகாரிக ளுக்கு தொடர்பு இருப்பதாகவும், முறைகேடு செய்த அதிகா ரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பாதிக் கப்பட்டவர்கள் முதல் -அமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை ஆணையருக்கு மனுக்கள் அனுப்பினர்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் இதுபற்றி ஆகஸ்டு 27-ந்தேதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப் பித்தனர்.
மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய திருச்சி மாவட்ட முன்னாள் திட்ட அதிகாரி நேரடி விசார ணைக்கு ஆஜர் ஆகாததால் அவரையும் வரவழைக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர்.