ரூ.4½ லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் : 3 பேர் கைது
திருச்சி, ஆக. 28 திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தில் எடமலைபட்டிபுதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற் கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சேர்ந்தமுகமது சிலர்சா (வயது 23), நைனா முகமது என்கிற பேட்டை (27), கோவையைச் சேர்ந்த சத்யபிரியா (25) என்பதும், போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து விற்றதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்து, ரூ.4 லட்சத்து 47 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மலைப்பட்டியை சேர்ந்த ஆறு முகம் (வயது 45), ராம்ஜிநகரை சேர்ந்த ஞானபிரகாசம் ஆகி யோரை போலீசார் கைது செய்து, அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் விற்ற அரிய மங்கலம் உக்கடையை சேர்ந்த பீர் முகமது (39), தில்லைநகர் ரகுமானியாபுரத்தை சேர்ந்த ஷேக் முகமது (47) ஆகியோரை போலீசார் கைது செய்து, 25கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.