துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிப்பு

0 17
Stalin trichy visit

திருச்சி, ஆக.29  துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் 532 கிராம் தங்கம் கடத்தி வந்த வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு

திருச்சி விமான நிலையத்துக்கு கடந்த 11-10-2019 அன்று துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த பயணிகளையும், அவர்க ளின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். அப்போது, துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ராம நாதபுரம் மாவட்டம் திருவாடனை எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த பவு சுல்ஹக் (வயது 28) என்பவர் 24 காரட் மதிப்பு கொண்ட 532 கிராம் தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது, இதைத்தொடர்ந்து அவரை சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் நிம்மல்லஜோயல் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தார். இது தொடர்பான வழக்கு திருச்சி சி ஜே.எம்.1 ஜே.எம்.1 கோர்ட்டில் கோர்ட்டில் நீதிபதி நீதிபதி அனுசுருதி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நடந்துவந்தது. இந்த வழக்கில் சாட் நிறைவடைந்ததை தொடர்ந்து பவுசுல்ஹக்குக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.