லாரி மீது பைக் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி, செப். 10 திருச்சி அருகே உள்ள திருச்செந்துறை வேளாள தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராகுல் (வயது 20). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று ஜீயபுரம் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த அவர் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த ராகுல் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்