திண்டுக்கல் ஜமால் முகமது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா
திருச்சி, செப். 10 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள ஜமால் முகமது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. மேலும் கல்லூரி வளாகத்தில் புதிதாக காஜா மியான் கல்லூரியின் விடுதியும் கட்டப்பட்டு பட்டது. இந்த விடுதியை திருச்சி ஜமால் முகமது கல்லூரி தாளாளர் காஜா நஜிமுதீன் திறந்து வைத்தார். இதில் பொருளாளர் ஜமால் முகமது, ஜமால் முகமது பொறியியல் கல்லூரியின் சேர்மன் அப்துல் முகமது நிகால், நிர்வாக இயக்குனர்கள் முகமது பாசில், மேகூல் தாரிக், கல்லூரி முதல்வர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.