கஞ்சி தொட்டி திறக்க முயற்சி – அரிசி மூட்டைகளை பறிமுதல்: போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதம்

0 29
Stalin trichy visit

திருச்சி,செப்.18 திருச்சி அருகே நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்தில் கஞ்சி தொட்டி திறப்பதற்காக கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகளை பறி முதல் செய்ததால், போலீசாருடன் விவசாயி கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

3-வது நாள் போராட்டம் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் செய்ய மேயாக தள்ளுபடி செய்ய கையை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் சமயபுரம் பள்ளி விடைசர்வீஸ் சாலை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகி றார்கள். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தலைமை யில் கடந்த 15-ந்தேதி தொடங் கிய இந்தபோராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 40-க்கும் மேற் பட்ட பல்வேறு விவசாய சங் கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர். இரவு பகலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் பங் /கேற்றுள்ள விவசாயிகள் அங் கேயே 3 வேளையும் சமையல் செய்து சாப்பிட்டு போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறார் கள். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் நேற்று கஞ்சி தொட்டி திறப்ப தற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதற்காக விவசாய சங்க நிர்வாகிகள் ஒரு வேனில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டுபோராட்டம் நடை பெற்ற இடத்திற்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த அரிசி மூட்டைகளை உள்ளே கொண்டு செல்ல விடாமல் தடுத்து பறிமுதல் செய்தனர். இதனால் விவசா யிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அரிசி, சமையலுக்காக கொண்டு வரப்பட்ட காய்க றிகள் மற்றும் ஊறுகாய் பாட் டிலை கூட போலீசார் பறிமுதல் செய்து கொண்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டி னார்கள். இதனை சுட்டிக் காட்டும் வகையில் விவசாயி கள் வாயில் துண்டு கட்டிக் கொண்டு கோஷங்கள் எழுப் பினார்கள்.

த.வெ.க. அரசு தேர்தல்  அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி நிபந்தனையும் இன்றி விவசா யிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து பயிர்க்க டன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். போலீஸ் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது அறவழிபோராட்டம் தொடரும் என்று  விவசாயிகள் குறிப்பிட்டார்கள். விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் மைதானம் அருகில் தாசில் தார் மற்றும் போலீஸ் அதிகா ரிகள் முகாமிட்டு விவசாயிகளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.