பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி : அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
திருச்சி, செப். 23 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர்கள், மாணவர்கள் உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஆய்வக வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் அது குறித்து கேட்டறிந்தோம்.
கல்லூரிகள் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்காக தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதியில் மாணவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளோம்.
பேராசிரியர்கள், பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்கள் அவர்களின் கோரிக்கையையும் குறிப்பெடுத்துள்ளோம். படிப்படியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முழு முயற்சி அரசு எடுக்கும்.
2018 ஆம் ஆண்டு தனியார் பல்கலைக்கழக சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இரண்டு பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டது. 2019 ல் 7 புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் ஆட்சி கலைவதற்கு முன்பாக ஒரு கல்லூரியை விரிவாக்கம் செய்து பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதை பொது மக்கள், சங்கங்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழகங்கள் என யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் அந்த மசோதா திரும்ப பெறப்பட்டது.
ஆனால் நாங்கள் கொண்டு வந்துள்ள சட்டம், பல்கலைக்கழகம் அமைக்க 100 ஏக்கர் நிலம் தேவை என்கிற விதியை 25 ஏக்கராகவும் இன்னும் பலவற்றை குறைத்துள்ளோம்.
தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்கிறார்கள். எனவே வெளிநாட்டில் கிடைக்கும் கல்வி உள்நாட்டிலேயே கிடைக்கும் வகையில் தான் தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழக எளிதாக தொடங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தனியார்மயம் கிடையாது. இந்த அரசு லஞ்சம் வாங்காத அரசு. பாராதிதாசன் மேலாண்மை கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்கப்படும்.
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் ஆளுநருக்கும் ஆட்சியாளர்களுக்கும் தினமும் சண்டை நடந்து கொண்டு இருந்தது. இன்று நாம் அந்த சண்டையே வேண்டாம் என நினைக்கிறோம்.
ஆளுநர் உயர்கல்வித்துறை அமைச்சர் முதலமைச்சர் ஆகியோர் இணக்கமாக இருந்து பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் பிரச்சினையை பேசி தீர்வு காணலாம் என இருக்கிறோம். தற்போது வழக்கு இருப்பதால் அது குறித்து விரிவாக பேசுகிறோம்.
அழகப்பா பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தரை சிண்டிகேட் கூடி தான் முடிவெடுத்தார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் டிஆர்பி மூலமாக 9000 பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பல்லாண்டுகளாக பணியில் உள்ள பேராசிரியர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.
த.வெ.க ஆட்சி வந்து 120 நாள் ஆகிறது. 120 நாட்களில் ஏராளமான திட்டங்களை செய்துள்ளோம் முக்கியமாக இந்த அரசு லஞ்சம் ஊழல் இல்லாத அரசாக உள்ளது இதன் மூலம் தேவையானதை தேவையான நேரத்தில் செய்து கொடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்