திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி, செப்.25 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர்- மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில்,
வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் கேஆர்ஆர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில துணை தலைவர் ஜான் அசோக் வரதராஜ, கும்பகோணம் மேயர் சரவணன், ஆராய்ச்சி பிரிவு மாநில தலைவர் மாணிக்கவாசகம், மாவட்ட பொருளாளர் முரளி, மாநில நிர்வாகிகள் முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், ஆராய்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் பாண்டியன், பெஞ்சமின் இளங்கோ, சிவசண்முகம், இளையராஜா, வையம்பட்டி ரமேஷ், மலை ஆனந்து, மாவட்ட நிர்வாகிகள் செந்தமிழ் செல்வன், ராஜா, சக்கரபாணி, விமல், கோட்டதலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல் ராய், அழகர், மலர் வெங்கடேஷ், கிருஷ்ணா, மணிவேல், பகதுர்ஷா, சம்சுதின், அணி தலைவர்கள் மீனவர் அணி தனபால், மகிளா காங்கிரஸ் ஷீலா செளஸ், வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், சில்வேஸ்டர், ஐடி பிரிவு கிளமென்ட், ஆர்டிஐ பிரிவு பிரபாகரன், வார்டு நிர்வாகிகள் விஜி, கண்ணன், சரவணன், வெங்கடேஷ், கண்டோன்மெண்ட் வளன்ரோஸ், ஜாஹிர், மதி, பால்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.