கூண்டில் அடைக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்! :பொதுமக்கள் அதிருப்தி

0 310
Stalin trichy visit

திருச்சி மரக்கடை பிரதான சந்திப்பு பகுதியில் நிறுவப்பட்ட எம்ஜிஆரின் உருவச்சிலையின் மணிக்கட்டுப் பகுதி கடந்த மே 9 ஆம் தேதி சேதமடைந்திருந்தது. இதையடுத்து, சிலையை சேதப்படுத்தியோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் போராட்டம் நடத்தினா்.பின்னா் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து சிலையைத் திறந்தபோது அதிகாரிகளின் கவனக் குறைவால் சிலையில் சேதம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.இதையடுத்து அரசு செலவில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்படும்; மேலும், தலைவா்களின் சிலைகள் இரும்புக்கூண்டு அமைத்து பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி தெரிவித்திருந்தாா். அதன்படி, மரக்கடை பகுதியில் எம்ஜிஆரின் சிலை உடைந்த பகுதி சரி செய்யப்பட்டு, சிலையை சுற்றி நடைபெறும் இரும்புக்கூண்டு அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் பணி முடியும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகள் அவமரியாதை செய்வதை தடுக்க அதிமுக ஆட்சியில் தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டு அமைக்கப்பட்டது. இப்படி கூண்டு அமைப்பது அந்த தலைவர்களை அவமதிப்பது போலாகும் என்று நீதிமன்றம் கூறிய நிலையிலும் எங்கு பார்த்தாலும் மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை யாரால் அவமரியாதை செய்யப்படாத நிலையில் இரும்பு கூண்டு அமைக்கப்படுவது. பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.