ஊரடங்கிலும் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணி தீவிரம்: பணியாளர்கள் முககவசம் அணிய வலியுறுத்தல்

0 215
Stalin trichy visit

முழு ஊரடங்கிலும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே விறுவிறுப்பாக நடைபெறும் தூர்வாரும் பணி ; ஊழியர்களும் முகக்கவசம் அணிய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டிருந்த சாக்கடை தூர்வாரும் பணி மாநகராட்சி சார்பில் இன்று முடுக்கி விடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும் விறுவிறுப்பாக இப்பணிகள் நடைபெறுவதால் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். அப்பகுதியில் நீண்டநாட்கள் துர்நாற்றம் வீசியதாகவும் மழை பெய்தால் சாக்கடை நீர் பொங்கி வெளியே வந்துவிடும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அப்பகுதி மக்கள் முன்வைத்தாலும் தற்போது நடந்துவரும் விருவிருப்பான பணிகள் குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தூய்மைப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் பணியில் ஈடுபடுவதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது இதனால் ஊழியர்களை முகக் கவசம் அணிவதற்கு மாநகராட்சி சார்பில் வலியுறுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.