வங்கி கணக்கு இல்லாத பொதுமக்களுக்கு பூஜ்ஜிய இருப்புத்தொகை கணக்கு ஆரம்பிக்கப்பட்டு விழிப்புணர்வு!

0 577
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், குமாரவயலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், வங்கி கணக்கு இல்லாத மக்களுக்கு மக்கள் கணக்கு திட்டத்தின் கீழ் பூஜ்ய இருப்பு தொகை ஜன்தன் வங்கி கணக்கு மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் தொடங்கப்பட்டு நிதியியல் மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் குமார வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முருகேசன், துணைத்தலைவர் சிங்காரவேலன், தலைமை ஆசிரியர் சு.பத்மநாபன் மற்றும் வங்கியின் வணிக தொடர்பாளர் ம. சுவேதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

மேலும் எழுத்தறிவு பெற்ற பாட்டிகளுக்கு வங்கி கணக்கு இலவசமாக தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை பெற வங்கி கணக்கு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.