சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோவில் கைது செய்த திருச்சி போலீசார்!

0 515
Stalin trichy visit

கள்ளக்குறிச்சி மாவட்டம் இடத்தைச் சேர்ந்தவர் தேவ் பாலா(29). கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இவரது வீட்டிற்கு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சென்று சில மாதங்களாக அங்கு தங்கி உள்ளார்.

அப்போது தேவ் பாலா சிறுமியிடம் பழகியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி ஊருக்கு செல்வதாக கூறிச் சென்றவர் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தேவ் பாலா சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர். தொடர்ந்து போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.