உறையூரில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி ஆக 11 திருச்சி உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது45) என்பவரின் மனைவி சபரி ஜோதி (வயது41). இவர் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் சபரி ஜோதி கடும் மன அழுத்தம் மற்றும் ஒற்றைத் தலைவலியால் அவதியுற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சபரி ஜோதி புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சபரி ஜோதியின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து உரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றனர்.