ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டை(PRA) களவிளக்கம் செய்த வேளாண் கல்லூரி மாணவர்கள்
திருச்சி, அக்.26 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில், நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் செ. ஆதித்யன், பெ. அன்பழகன், செ. தேவஅபிஷேக் , க. தினேஷ்,
வி. மதுபாலன், செ. நிரஞ்சன், சு. ராஜேந்திர பிரசாத், அ. விஜயசாரதி, ரா. விஜேஷ், அ. விமல்ராஜ் மற்றும் கு. விஷ்ணு பிரசாத் ஆகியோர், முதல்வர் முனைவர். வெங்கடபிரபு அவர்களின் வழிகாட்டுதலிலும், பாட ஆசிரியர் ம. மோகன்ராஜ் அவர்களின் மேற்பார்வையிலும்ஓருங்கிணைப்பாளர்களான முனைவர். கண்ணன் மற்றும் நந்தகுமார் ஆகியோரது ஆலோசனையிலும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்( RAWE) கிழ் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் துணைப்பிரிவாக, மேட்டுப்பட்டி கிராமத்தில் சமூக வரைபடம், பிரச்சனை மரம் , செல்வத்தர வகைப்பாடு, பருவகால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாட்டு கடிகாரம் போன்ற ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டை வரைந்து விவசாயிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்களுக்கு கிராமத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.