Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சி, நவ. 13 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள காரைக்குளத்தை சேர்ந்தவர் துரைமுருகன் (36) இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சிஎன்சி மெஷின் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த 9 ம் தேதி காலை அவரது மனைவி சங்கீதாவை தொடர்பு கொண்டு பேசிய துரைமுருகன் நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.
இதையடுத்து குடும்பத்தினர் துரைமுருகனை பலமுறை தொடர்பு கொண்டும் அவரிடம் பேச முடியாத நிலையில் அங்குள்ள நண்பர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போது பெர்டாக் பகுதிக்கு சென்ற போது அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அவர் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. 8 பேர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய நிலையில் சிலர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் துரைமுருகன் உள்ளிட்டோரின் நிலை இதுவரை தெரியவில்லை. இதனால் வேதனையில் உள்ள துரைமுருகன் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழக முதல்வர் இந்த விசயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து துரைமுருகனின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 4 நாட்களாக துரைமுருகன் மாயமாகி எந்த தகவலும் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்