செங்குளம் காலனி பகுதியில் சுகாதார சீர்கேடு : துணை மேயர் ஆய்வு
திருச்சி, நவ. 13 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினமா செய்தார்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை 33 வது வார்டு செங்குளம் காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாகவும் மற்றும் குடிநீர் தொட்டியில் சாக்கடை கழிவு நீர் கலந்து புழுக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசி அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் புகாரின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி ஆணையர் பொன்மணி மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்நிலையில் திருச்சி செங்குளம் காலனி பகுதியில் துணை மேயர் திவ்யா தனக்கோடி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி துணை மேயர் திவ்யாவிடம் உங்கள் வார்டில் தொடர்ந்து பல்வேறு குறைகள் மற்றும் சுகாதார சீர்கேடு உள்ள நிலையில் அவனை சரி செய்து கொடுங்கள் என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.