சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் : திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

0 58
Stalin trichy visit

திருச்சி, நவ.19  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வழக்கறிஞர்கள் சார்பாக அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட தியாகி ‎வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி வழக்கறிஞர்கள் சார்பாக அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் வரகனேரி சசிகுமார், திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்பி சௌந்தர்ராஜன் முன்னாள் அரசு வழக்கறிஞர் எம். ஜெயராமன் வழக்கறிஞர்கள் முத்து பழனியப்பன், புவனேஸ்வரி, சிவா வன்னையராஜ் மற்றும் வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.