தேசிய சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டி: திருச்சி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார்
திருச்சி,நவ.19 தேசிய சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டி: திருச்சி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார்
மத்திய பிரதேசம் மாநிலம், ஷாஜாப்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் நடைபெற்ற தேசிய சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டி கடந்த 16,17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் பிரகாஷ் நகரில் இயங்கி வரும் தமிழ் வாரியர் கராத்தே அகாடமியில் பயிற்சி பெறுபவர் மாணவி பி.லக்ஷனா. இவர் கார்ட்டூர் மான் போர்ட் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படித்து வருகிறார். இவர் 14 வயதிற்கு உட்பட்டவருக்கான,-56 கிலோ எடை பிரிவில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழ் வாரியர் கராத்தே அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கராத்தே ஆர். சுதாகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.