மணப்பாறை அருகே பணியில் இருந்த காவலாளி உயிரிழப்பு : காவல்துறையினர் விசாரணை
திருச்சி, நவ.23 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே
கல்லுப்பட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த செந்தில் முருகன் (44 ) என்பவர் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார் . இந்த நிலையில் நேற்று பிற்பகல் பாதுகாவலர் தங்கும் அறையில் மயக்க நிலையில் இருந்தவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான காவலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.