ஸ்ரீரங்கத்தில் நீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயண பேரணி

0 15
Stalin trichy visit

திருச்சி, நவ.23 நீர் சேமிப்பை வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தில் நடந்த விழிப்புணர்வு நடைபயண பேரணி – 300-க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் பங்கேற்பு.
‎நீர் சேமிப்பு, தூய்மையான ஸ்ரீரங்கம் மற்றும் திருமஞ்சன காவிரி புனரமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஐ.ஐ.டி.எம் பிரவர்தக், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் ராக் அமைப்பு மற்றும் கோவை குளங்கள் அமைப்பு ஆகியவை இணைந்து திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று நடைபெற்றது.
‎‎அரங்கன் திருமஞ்சன காவிரி புனரமைப்புத் திட்டத்தின் (ATCR) கீழ் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடப்பயணமானது அம்மா மண்டபத்தில் தொடங்கி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் நிறைவடைந்தது.இதில் கல்லூரி மாணவர்கள், பள்ளி குழந்தைகள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர் நடைப்பயணத்தில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், தண்ணீரைச் சேமிப்பதன் அவசியம், மாசுபடுவதைத் தடுத்தல் மற்றும் காவிரி ஆறு மற்றும் அதனைச் சார்ந்த கால்வாய்களை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பியபடியும் சென்றனர்.
‎‎
‎இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஸ்ரீ வைஜயந்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழிப்புணர்வு நடை பயணத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.