பைக் மோதியதில் மூதாட்டி பலி

0 11
Stalin trichy visit

திருச்சி, நவ.23 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே பாலக்கருதம்பட்டியைச் சேர்ந்தவர் செவத்த மணி (72) .இவர் நேற்று காலை அவரது தோட்டத்திற்கு மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த பெருமாள்பட்டியைச் சேர்ந்த குருநாதன் மகன் மகாமுனி என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர் .அங்கு அவருக்கு முதல் உதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் .

காவல்துறையினர் சாலை விபத்தில் பலியான மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.