நீதிமன்ற உத்தரவுக்கே மதிப்பில்லையா? வி.எச்.பி. நிர்வாகி கேள்வி

0 58
Stalin trichy visit

திருச்சி, நவ. 24  நீதிமன்ற உத்தரவுக்கே மதிப்பில்லையா? ஜனநாயக நாட்டில் நீதிக்காகக் குரல் கொடுப்பதும் குற்றமா? – காவல்துறை நடவடிக்கைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி ஆனந்த் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் பாரம்பரிய முறைப்படி தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டுவதாகவும், நீதிமன்ற உத்தரவையும் இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையையும் வலியுறுத்திக் குரல் கொடுத்து வரும் தன்னை காவல்துறையினர் வீட்டிலேயே இருக்குமாறு கட்டுப்படுத்தியுள்ளதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் – பஜ்ரங்தள் மாநில இணை அமைப்பாளர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை இல்லையா? நீதிமன்ற உத்தரவை மதித்து நடைமுறைப்படுத்தக் கோருவது சட்டவிரோதமான செயலா? ஜனநாயக நாட்டில் ஒருவரின் கருத்துரிமையையும், சட்டப்படியான போராட்ட உரிமையையும் காவல்துறையினர் இவ்வாறு கட்டுப்படுத்தலாமா? தன்னை வீட்டை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுப்பதற்கான சட்டப்பூர்வமான காரணம் என்ன? எனப் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

நாங்கள் கேட்பது சட்டத்திற்கு எதிரான உரிமை அல்ல; நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான். நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசின் தலையாய கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வமான விளக்கமும், உரிய ஆணையும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆனந்த், எத்தனை தடைகள் வந்தாலும் சட்டத்தின் வழியில் நின்று பாரம்பரிய வழிபாட்டு உரிமைக்காகவும், நீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும், தர்மத்தின் வழியில் சட்டத்தின் துணையோடு நீதிக்கான பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.