தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் திட்டமாகும். இத்திட்டம் திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், முசிறி மற்றும் துறையூர் ஆகிய 5 வட்டாரங்களில் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஒரு சேவை வசதி மையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த சேவை மையத்தில் தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முதுகலை பட்டம் முடித்த மற்றும் கணினி திறன் பெற்றுள்ள 40 வயதுக்குட்பட்ட ஊரக தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவடிக்கை சார்ந்த திறன் பெற்றுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை https://www.tnrtp.org என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நவம்பர் 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், முதல் தளம், பூமாலை வணிக வளாகம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி-620 001 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.