திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நாளை துவங்க உள்ள நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய திருச்சியின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது.

இந்த நிலையில் மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட இனாம் குளத்தூர் ஊராட்சியில் இருக்ககூடிய சின்ன ஆலம்பட்டி சேர்ந்த செல்வம் என்பவர் வீட்டில் கனமழை காரணமாக இடி விழுந்தது.
இதில் வீட்டில் இருந்த மின்விசிறி மற்றும் கதவு என அனைத்தும் சேதம் அடைந்தது. இடி தாக்கியதில் செல்வம் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆனந்தகுமார் செல்வகுமார் இந்திரா ஆகியோர் காயமடைந்தனர்.

தொடர்ந்து அவர்களை அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் அதிமுக புறநகர் வட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.