உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்

0 435
Stalin trichy visit

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் மூலஸ்தானம் மற்றும் அர்த்தமண்டபம் சீரமைக்கும் பணி ரூ.15 கோடியே 20 லட்சம் செலவில் கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கடந்த மாதம் பாலாலயம் மேற்கொள்ளப்பட்டு மூலவர் அம்மன் மரக்கதவுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

அர்த்தமண்டப பணிகளுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கருங்கல் கொண்டுவரப்பட்டு கடந்த ஒரு வருடமாக கோவில் அலுவலகம் பின்புறத்தில் நடந்து வருகிறது. அர்த்தமண்டபம் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பக்கர்கள் மூலஸ்தானத்தை தரிசனம் தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அர்த்தமண்டபத்தின் ராஜநிலை அமைக்கும் பணி சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.