இளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது; உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்

0 492
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த காட்டூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காட்டூரில் உள்ள ஒரு குளிர்பான கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது அவரை கடை உரிமையாளர் காட்டூர் கணேஷ் நகரில் வசித்து வரும் கவியரசன்(35) என்பவர் அவரை கற்பழித்து விட்டதாகவும், மேலும் கவியரசன் அதனை தன் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதற்கு அவரது மனைவி சியாமளா(30) மற்றும் அவரது கடையில் வேலை பார்த்த காட்டூர் பாரதியார் தெருவை சேர்ந்த சுரேஷ் மனைவி நித்யா(32) ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும், இதுகுறித்து அந்த இளம்பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.